Social Sharing
அதிமுகவிற்கு ஓட்டுபோட்டா அனைத்து வசதிகளும் வீடு வந்து சேரும், திமுகவிற்கு ஓட்டுபோட்டா நம்ம வீடுகூட நம்மகிட்ட இருக்காது எல்லாதையுமே உருட்டி, சுருட்டி எடுத்துகிட்டு போய்டுவாங்க மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் ஶ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம்.
திருச்சி: அதிமுகவிற்கு ஓட்டுபோட்டா அனைத்து வசதிகளும் வீடு வந்து சேரும், திமுகவிற்கு ஓட்டுபோட்டா நம்ம வீடுகூட நம்மகிட்ட இருக்காது எல்லாதையுமே உருட்டி, சுருட்டி எடுத்துகிட்டு போய்டுவாங்க மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் என்று ஶ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.குப கிருஷ்ணன் அவர்கள் 13ஆம் நாள் பிரச்சாரமான நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அளுந்தூர், கோடங்கிப்பட்டி, குள்ளம்பட்டி, யாகப்புடையான்பட்டி, கவுத்தநாயக்கன்பட்டி, செட்டியூரணிப்பட்டி, செங்குளம், பள்ளப்பட்டி, சூறாவளிப்பட்டி, மாத்தூர், சன்னாசிப்பட்டி, அண்ணாநகர், அம்மாபேட்டை, பூலாங்குளத்துப்பட்டி, இனாம்குளத்தூர் கடைவீதி, வெள்ளிவாடி, செவக்காட்டுப்பட்டி, ஆலம்பட்டி, கடப்பட்டி, ராஜக்காட்டுப்பட்டி, தோப்புப்பட்டி, கீழப்பட்டி, கோமங்களம், கொச்சடிப்பள்ளம், பெருமாம்பட்டி, வேலப்புடையான்பட்டி, குஜிலியம்பட்டி, சேதுராப்பட்டி, எரங்குடி, கும்பக்குறிச்சி, பார்த்திமாநகர், செவந்தியாணிப்பட்டி, அய்யந்தோப்பு, கொட்டப்பட்டு, துறைக்குடி, குளவாய்பட்டி, கொழுக்கட்டைக்குடி, முள்ளிப்பட்டி, திருமலைசமுத்திரம், ஓலையூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் கு.ப. கிருஷ்ணன் பேசுகையில் : இனாம்குளத்தூர் பகுதி மக்களுக்காக, இந்தியன் ஆயில் நிறுவனம் இருக்கும் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி நீர் சேமித்து வைக்க வழிவகை செய்யப்படும் எனவும் அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கு தனியார் நிறுவனங்களிடம் கலந்தாலோசித்து பெண்களுக்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் அப்பகுதியில் புதிய தொழிற்சாலை நிறுவ முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மாத்தூரில் பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த போது அங்கு வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாய கூலி தொழிலாளர்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தனக்கு ஆதரவாக வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.
அதேபோல இனாம்குளத்தூர் பகுதியில் 100 நாள் வேலைதிட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெரியவர்கள் மற்றும் பெண்களிடம் அரசின் நல திட்டங்களை எடுத்துச் சொல்லி தனக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் மேலும் பேசும் பொழுது என்னுடைய வசதிக்கு காரணம் என்னுடைய உழைப்பே தவிர திமுகவினரை போல ஆற்று மணலை கொள்ளையடித்தோ, அடி மனையை அபகரித்தோ, கட்டப்பஞ்சாயத்து செய்தோ வருவாயைப் பெருக்கிக் கொள்ளவில்லை. மேலும் அவர் அம்மாபேட்டை ஊராட்சியில் பேசுகையில், திமுகவில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் நான் எந்த நல்லது கெட்டதுக்கும் செல்வதில்லை என்று கூறுகிறார் ஆனால் அந்த வேட்பாளரின் துணைவியார் இறப்பிற்கு கட்சிப் பாகுபாடின்றி நான் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வந்தேன் அதுதான் அதிமுகவின் பெருந்தன்மை, ஆனால் திமுகவின் உறுப்பினர்களோ முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தாய்மையின் புனிதத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள். அதை தொடந்து பூலாங்குளத்துப்பட்டியில் பிரச்சாரம் செய்யும்பொழுது “மக்களே ஞாபகம் வெச்சிக்கோங்க அதிமுகவிற்கு ஓட்டுபோட்டா அனைத்து வசதிகளும் வீடு வந்து சேரும், திமுகவிற்கு ஓட்டுபோட்டா நம்ம வீடுகூட நம்மகிட்ட இருக்காது எல்லாதையுமே உருட்டி, சுருட்டி எடுத்துகிட்டு போய்டுவாங்க மக்களே சிந்தித்து வாக்களீயுங்கள்” என அதிமுக வேட்பாளர் குப கிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது மணிகண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகருப்பண், பாரதிய ஜனதா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர் கல்லிக்குடி ராஜேந்திரன், இனாம்குளத்தூர் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் சந்திரசேகர், பெரியசாமி, மகேஷ்வரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தமிழழகன் , மணிகண்டன் ஒன்றிய கவுன்சிலர் நல்லுசாமி மற்றும் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
ஷாஹுல் ஹமீது.