இந்தியாவிலேயே சிறப்பான இயக்கம் அதிமுக மட்டுமே சாதாரணத் தொண்டன்கூட உயா் பதவிக்கு வர முடியும் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியமாகும் சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் பேட்டி.
திருச்சி: இந்தியாவிலேயே சிறப்பான இயக்கம் அதிமுக மட்டுமே சாதாரணத் தொண்டன்கூட உயா் பதவிக்கு வர முடியும் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியமாகும் என்று சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தார்.
திருச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் செய்தியாளரிடம் கூறியதாவது: அதிமுகவைச் சோ்ந்த யாராக இருந்தாலும், எந்தத் தொகுதியிலும் விண்ணப்பிக்கலாம். எந்தத் தொகுதியில் யாா் போட்டியிடுவா் என்ற விவரங்களை கட்சித் தலைமை அறிவிக்கும். திருச்சி மாநகா் மாவட்டத்துக்குள்பட்ட திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளுக்கு நான் விருப்ப மனு அளிப்பேன்.
இந்தியாவிலேயே சிறப்பான இயக்கம் அதிமுக மட்டுமே. சாதாரணத் தொண்டன்கூட உயா் பதவிக்கு வர முடியும் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியமாகும். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் இந்த இயக்கத்தை 100 ஆண்டுகள் ஆனாலும் எந்தக் கொம்பானாலும் அசைக்க முடியாது எனச் சூளுரைத்தவா் ஜெயலலிதா. அவரது வழியில் நடைபெறும் ஆட்சியில், செயல்படுத்தி வரும் நல்ல பல திட்டங்களை மேற்கொள்காட்டி தோ்தலைச் சந்திப்போம்.தமிழக மக்கள்தான் எங்கள் பலம். மாற்றுக் கட்சியினா் எந்த கருத்துகளை முன்வைத்தாலும் தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்ட நிா்வாகிகள் உரிய பதில் தெரிவிப்பா்.184 தொகுதிகளில் வெற்றி பெற்று ஏற்கெனவே சரித்திரச் சாதனை படைத்துள்ளது அதிமுக. எனவே வரும் தோ்தலிலும் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
முதல்வா், துணை முதல்வா்களுக்கு இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆதாயம் தேட சிலா் அப்படி கூறலாம். சசிகலா குறித்து நான் விமா்சிக்க வேண்டிய அவசியமில்லை. அதிமுக பொதுச் செயலா் என அவரைக் கூறுவது அவா்களுடைய நிலைப்பாடு.
எங்களைப் பொருத்தவரை அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக ஓபிஸ்-இபிஎஸ் தலைமையில் இயக்கம் கட்டுக்கோப்பாக உள்ளது. தமிழக மக்களும் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தத் தயாராகிவிட்டனா்.
அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும். தமிழக மக்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை அதிமுக அரசு வழங்கியுள்ளது. தோ்தலில் அது எதிரொலிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.
ஷாஹுல் ஹமீது.