Social Sharing
இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் கிராமங்கள் தோறும் குழந்தைகளுக்காக பிரத்தியேக நூலகம் அமைப்பதே தேசிய குழந்தைகள் ஆணையத்தின் லட்சியம் ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் பேட்டி.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் இந்தியா முழுவதும் தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் கிராமங்கள் தோறும் குழந்தைகளுக்காக பிரத்தியேக நூலகம் அமைப்பதே பிரதான லட்சியம் என்று தேசிய குழந்தைகள் ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.
தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரது அலுவலகத்தில் சந்தித்து குழந்தைகள் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான பிரத்தியேக இலவச தொலைபேசி எண், குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் சம்வேதனா, மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக 103 காவல் நிலையம் அமைத்தது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று அதிகமாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் படி வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அதேபோல் திருவனந்தபுரத்தில் காவல்துறை அதிகாரி விஜயன் தலைமையில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, மற்றும் பராமரிப்பு நிலையம் எனப்படும் சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் குறித்த தவறான தகவல்கள் பரப்புவோரை / பரப்புதலை தடுப்பு நடவடிக்கை நிலையம், மற்றும் . எனப்படும் குழந்தைகளுக்கான பிரத்தியேக காவல் நிலையங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் அவர்கள் நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கேரளா மாநில காவல் துறை தலைவர் லோக்நாத் பேரா தலைமையில் காணொலி மூலம் 14 மாவட்டங்களை சேர்ந்த காவல் துறையினர் கலந்துகொண்ட ஆய்வு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது குழந்தைகள் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுத்தல், குழந்தைகளுக்கான பிரத்தியேக காவல் நிலையங்கள், மாணவ காவல்படை, குழந்தைகள் மத்தியில் கொரோனா நோய் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை பிரதானமாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கேரள மாநில பெண்கள் & குழந்தைகள் மற்றும் சமூக நீதிதுறை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் குழந்தைகள் நலத்துறையை சார்ந்த துணை இயக்குனர் உடனான ஆலோசனை கூட்டம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் ஆணையத்தின் காவல் என்னும் திட்டம் அமல்படுத்துவது தொடர்பாகவும், மாநிலத்தில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பிரத்தியேக நூலகத்தை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் துவங்கி வைத்தார். அப்போது சமீபத்தில் தான் எழுதி வெளியிட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பில் பிரதமர் மோடி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த புத்தகம் குழந்தைகளுக்கு பரிசளித்தார்.
பின்னர் தேசிய குழந்தைகள் ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் செய்தியாளரிடம் கூறுகையில் : ஆலப்புழா மாவட்டத்தில் திறக்கப்பட்ட நூலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து தான் எழுதிய புத்தகத்தை நூலகத்தில் கொடுத்தேன். இந்தியா முழுவதும் தேசிய குழந்தைகள் ஆணையத்தின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் இந்தியா முழுவதும் தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் கிராமங்கள் தோறும் குழந்தைகளுக்காக பிரத்தியேக நூலகம் அமைப்பதே பிரதான லட்சியமாகும். கேரளா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து உள்ளேன். பணிகள் மிகச்சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
ஷாஹுல் ஹமீது