Social Sharing
வியாழக்கிழமை – 26/03/2021
இந்த நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான். மத்தேயு 25:15
ஒருவனுக்கு ஐந்து தாலந்தும் இன்னொருவனுக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவனுக்கு ஒரு தாலந்தும் கொடுக்கப்படுவதால் ஆண்டவர் பட்சபாதம் உள்ளவர்போல தோன்றுகிறது. ஆனால் அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக என்று சொல்லப்பட்டு இருப்பதை கவனியுங்கள். திறமை என்றால் உங்களால் எவ்வளவு செய்யமுடியுமோ அதற்கேட்ப என்பதாகும். ஆண்டவர் உங்கள் திறமைக்கு தக்கதாகவே வாய்ப்புகளையும், தாலந்துகளையும் அளிக்கிறார். உங்கள் திறமைக்கு அதிகமாகவும் கொடுப்பதில்லை. குறைவாகவும் கொடுப்பதில்லை. எனக்கு தாலந்து குறைவாயிருக்கிறது என்று சொல்லாதிருங்கள். உங்கள் திறமைக்கேட்பவே ஆண்டவர் கொடுத்து இருக்கிறார். உங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் தாலந்துகளை பயன்படுத்துங்கள்.
அறிக்கை:-
எனது திறமைக்கு தக்கதாகவே வாய்ப்புகளையும், தாலந்துகளையும் ஆண்டவர்அளிக்கிறார். அவற்றை உபயோகித்து வர்த்திக்கப்பண்ணுவேன்.ஆமென்
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு.
Cell:9994209793 # Email:aronrhema@gmail.com