இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 16/02/2021
அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும் 1 இராஜாக்கள் 18:36
அக்கினி இறங்கத் தக்கதான அற்புதத்தை எலியா நிகழ்த்தினதற்கு காரணம் என்ன? தேவனுடைய நாம மகிமைக்காகவே. உங்கள் தேவையும் சந்திக்ப்பட வேண்டும் என்று நீங்கள் ஜெபிக்கும்போது கர்த்தருடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்று உண்மையாய் ஜெபிப்பீர்கள் என்றால், தேவன் பதில் அளிப்பார். 2இராஜா 19:19-ல் இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும் படிக்கு எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று எசேக்கியா விண்ணப்பம் பண்ணினான் 1சாமு 17:46-ல் இன்றைய தினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார். நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும, பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன். அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள் என்று தாவீது அறிக்கை செய்தான். தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்பதற்காய் உங்கள் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும். அற்புதங்கள் நடக்க வேண்டுமென்று வாஞ்சிப்பீர்கள் என்றால் உங்களுக்கு பதில் கிடைக்கும். அற்புதம் நடக்கும்.
அறிக்கை:
என் தேவன் என் தேவையை சந்திப்பதினால் இஸ்ரவேலரின் தேவன் ஒருவர் உண்டு என்று உலகத்தார் எல்லோரும் அறிந்து கொள்வார்கள். என் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ்வதால் நான் ஆராதிக்கிற தேவன் வல்லமையுள்ளவர் என்பதை இவ்வுலகம் அறிந்து கொள்ளும். ஆமென்.
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு.
Cell:9994209793 # Email:aronrhema@gmail.com