Social Sharing
ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, 1 இராஜாக்கள்18:4
எலியாவினுடைய ஜெபம் தாழ்மையான ஜெபம் அக்கினி இறங்கத்தக்கதான அற்புதத்தை அப்பொழுது தான் நிகழ்த்தியிருந்தும் மழைக்காக எலியா ஜெபித்தபோது தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து எலியா ஜெபித்தான். இப்படித்தான் ஜெபிக்க வேண்டுமென்று யாரும் அவனுக்கு சொல்லவில்லை. கர்த்தருடைய சமூகத்தில் அவ்வளவு தாழ்மையாய் அவன் நடந்து கொண்டான். கிடைத்த வெற்றியில் அவன் பெருமிதம் கொள்ளவில்லை. Total lack of confidence in your own ability and total dependence on God’s ability. தாழ்மை என்றால் என்ன? சுய திறமையில், பலத்தில் கொஞ்சமேனும் நம்பிக்கை வைக்காமல் ஆண்டவருடைய வல்லமையிலே; நம்பிக்கை வைப்பதே தாழ்மை. எலியா அவ்வாறு தான் செயல்பட்டான்.
அறிக்கை
நான் தாழ்மையுடன் ஏறெடுக்கும் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவி கொடுப்பார். தாழ்மையானவர்களுக்கு கிருபை அருளுகிறவர். அவர் எனக்கு நன்மையை அளிப்பார். ஆமென்
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு.
Cell:9994209793 # Email:aronrhema@gmail.com