Social Sharing
செவ்வாய்கிழமை – 23/03/2021
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபேசியர்:4:32
மன்னிப்பு குறித்து பழைய உடன்படிக்கை மற்றும் புதிய உடன்படிக்கைக்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால்; பழைய உடன்படிக்கையில் நீங்கள் பிறரை மன்னித்தால்தான் கர்த்தரால் நீங்கள் மன்னிக்கபடுவீர்கள். ஆனால், நற்செய்தி என்னவென்றால் நாம் இன்னும் பழைய உடன்படிக்கையில் இல்லை, கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து மரணத்திற்கு ஏதுவான எல்லா சட்டத்திட்டங்களையும் குலைத்து (அழித்து), உலகத்தாருடைய எல்லா பாவங்களையும் மன்னித்து புதிய உடன்படிக்கையை நிலைநாட்டினர். கொலோ 2:13,14; எபேசியர் 2:15; இதை விசுவாசிக்க உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்று நம்புகிறேன். நீங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்பதற்காக மன்னிக்க கூடாது, நீங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டுயிருக்கிறபடியால் மன்னியுங்கள். இரண்டாவதாக, நீங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்பதற்காக பாவத்தை அறிக்கை செய்யவேண்டியதில்லை, மாறாக நீங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டுயிருக்கிறபடியால் அறிக்கை செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டுயிருக்கிறீர்கள் என்ற அறிவு தான் பாவத்தை மேற்கொள்வதற்கான பெலன்.. நீங்கள் இயேசுவின் நிமித்தம் ஏற்கனவே மன்னிக்கப்பட்டுயிருக்கிறீர்கள்.
அறிக்கை:-.
கிறிஸ்து சிலுவையில் உலக மக்களனைவரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டார் என்பதை நான் அறிவேன். ஏற்கனவே என் பாவங்களை அவர் எனக்கு மன்னித்திருக்கிறபடியால் நானும் மன்னிப்பேன். ஆமென்
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு.
Cell:9994209793 # Email:aronrhema@gmail.com