இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை – 05/04/2021
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். மத்தேயு 5:8.
இந்த வசனம் மறுபிறப்பினால் பரிசுத்தமாக்க்கடுவதை குறிக்கவில்லை. 1 யோவான் 1:9 ல்நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். என்று கூறுகிறது. இது இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம் செய்தால் என்ன செய்வது என்பதற்காய் சொல்லப்பட்டது. எனவே நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு நாம் சுத்தமுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களே தேவனை தரிசிப்பார்கள் என்று இயேசு கூறுகிறார். தரிசிப்பார்கள் என்ற பதம் உணர்ந்து கொள்வார்கள் என்று மூலபாஷையில் சொல்லப்பட்டுள்ளது. சுவிசேஷகூட்டங்களில் வேத போதனைகள் கொடுக்கப்படும்போது ஊழியர் கொடுக்கிற ஒருசெய்தியில் உள்ள ஒரு விளக்கத்தை நீங்கள் காணுகிறதை உணருகிறீர்களா? அக்கருத்தை நான் காண்கிறேன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் அல்லவா அதைத்தான் இந்த வசனம் சொல்லுகிறது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாயிருந்தால் தேவனுடைய வார்த்தையின் விளக்கத்தை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாய் இருந்தால்தான் உங்கள் ஜெபம் கிரியை செய்யும், நீங்கள் கர்த்தருக்கு கொடுப்பது கிரியை செய்யும், உங்கள் ஐக்கியத்திற்கும் பலன் கிடைக்கும்.
அறிக்கை:
அவர் தமது இரத்தத்தினால் என் பாவங்களை மன்னித்து எல்லா அநியாயங்களையும் நீக்கி என்னை சுத்திகரிப்பார். கர்த்தருடைய வார்த்தையின் மகத்துவத்தை நான் காண்பேன்.
ஆமென். போதகர் P.V. ஆரோன் ஜி எம் சி செங்கல்பட்டு
தொடர்புக்கு: 999420 9793 # aronrhema&gmail.com