அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள். 1 இராஜாக்கள் 17:15
எலியா விதவையினிடத்தில் முதலில் தனக்கு ஒரு அடையை பண்ணி என்னிடத்தில் கொண்டு வா என்றான். அவ்வாறு செய்தால் எண்ணையும் மாவும் குறைந்து போவதில்லை என்றான். எலியாவின் வார்த்தைகளை இந்த விதவை சோதித்து பார்க்கவில்லை. அடையை செய்த பிறகு மாவும் எண்ணெயும் குறையாமல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு எலியாவிற்கு கொடுக்கவில்லை. எலியாவின் வார்த்தையின் படி அவள் செய்தாள். ஒவ்வொரு நாளும் மாவும் எண்ணெயும் எடுக்கப்பட்டும் அவை குறையவே இல்லை. எத்தனை முறை எடுத்தாலும் மாவும் எண்ணெயும் குறையவே இல்லை. கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நீங்கள் உபயோகித்து தீர்த்து விடவே முடியாது. கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் காலியாவதே இல்லை..( God”S resources cannot be exhausted)
அறிக்கை:
என் தேவன் தம் ஐசுவரியத்தின்படி என் குறைவை நிறைவாக்குவார். என் தேவனுடைய ஆசீர்வாதங்கள் என்றென்றும் குறையாமல் எனக்கு நிரம்ப கிடைக்கும். ஆமென்.
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு.
Cell:9994209793
Email:aronrhema@gmail.com