இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 06/04/2021
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். மத்தேயு 5:9
சமாதானம் பண்ணுகிறவர்கள் என்பது கருத்து வேறுபாடுகளோடு, மனவருத்தத்தோடு பிரிந்து இருக்கிற இரண்டு நபர்களை சமாதானம் பண்ணுவதைக்கறிக்கவில்லை. இது சுவிசேஷத்தை அறிவிப்பதைக்குறிக்கிறது. எபேசியர் 6:15 ல் சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், இருங்கள் என்று கூறுகிறது. நாம் சொல்லும் சுவிசேஷமானது மனிதனை தேவனோடு ஒப்புறவாகச் செய்கிறது. ஒப்புறவாகுல் என்றால் தேவன் சமாதானம் செய்து விட்டார். மனிதன் இப்போது ஆண்டவரிடம் சேரவேண்டும்.
ஏசாயா 52:7 ல் சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. என்று கூறுகிறது. பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று தூதர்கள் கிறிஸ்துவின் பிறப்பின்போது அறிவித்தார்கள். மூல மொழிபெயர்ப்பிலே தேவன் பிரியமாய் உள்ள மனுஷனுக்கு சமாதானம் உண்டாவதாக என்று சொல்லப்பட்டள்ளது.
யார்மேல் தேவன் பிரியமாய் இருப்பார்? அவரை விசுவாசிக்கிறவர்கள் மேல் தான். யார் அவர்கள்? இரட்சிக்கப்பட்டவர்கள். எனவே மனிதனை தேவனோடு ஒப்புறவாகும்படி செய்கிறவர்களே சமாதானம் பண்ணுகிகிறவர்கள். அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் ஆவார்கள் என்று சொல்லப்படவில்லை. அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது . அதாவது உங்களை தேவனுடைய பிள்ளைகளாக மற்றவர்களுக்கு முன்பக காண்பிக்கும்.
அறிக்கை:
சமாதானத்தின் சுவிசேஷத்தை அறிவிக்க நான் எப்பொழுதும் ஆயத்தமுள்ளவனாய் இருப்பேன். ஆமென்.
போதகர் P.V. ஆரோன் ஜி எம் சி செங்கல்பட்டு
தொடர்புக்கு: 999420 9793 # aronrhema&gmail.com