இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புதன்கிழமை – 07/04/2021
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. மத்தேயு 5 :10
ஆவிக்குறிய வாழ்க்கையில்; வளர்ந்தவர்களைக் குறித்த வசனம் இது நீதியினிமித்தம் துன்பப்படும்பொழுது நீங்கள் சந்தோஷத்தோடு களிகூறுவீர்கள் என்றால் நீங்கள் வளர்ந்தவர்கள், துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என்றுசொல்லப்படகிறது. அநியாயம், பாவம் செய்து துன்னப்படுகிறவர்களை இது குறிக்கவில்லை மறுபிறப்பின் அனுபவத்திலிருந்து வளர்ந்த நாம் ஆவிக்குறிய முதிர்ச்சிக்கு இப்பொழுது கடந்து வந்துவிட்டோம். சுவிசேஷத்தின் நிமித்தம் அதாவது நீதியின் நிமித்தமாய் நீங்கள் துன்பப்படுவீர்;கள் என்றால் சந்தோஷப்பட்டு களிகூறுங்கள்
அறிக்கை:
நிpதியினிமித்தம் துன்னப்படுகிற நான் பரலோகத்தில் மிகுந்த பலனை பெறுவேன். ஆகையால் சந்தோஷப்பட்டு களிகூறுவேன். ஆமென்.
போதகர் P.V. ஆரோன் ஜி எம் சி செங்கல்பட்டு
தொடர்புக்கு: 999420 9793 # aronrhema&gmail.com