இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. 1 இராஜாக்கள் 17:17
எந்த விதவையின் வீட்டில் எண்ணெயும், மாவும் குறையாது அற்புதம் நிகழ்ந்ததோ அந்த வீட்டில் மரணம் ஏற்பட்டது. கர்த்தருடைய அற்புதம் வீட்டில் நிறைவேறிக் கொண்டிருக்கும் போதே திருடனாகிய பிசாசனவன் விதவையின் மகனை ( ஜீவனை ) திருடி விட்டான். கர்த்தருடைய அற்புதத்தை நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் போதே ஒரு இழப்போ, வியாதியோ ஏற்படலாம். ஏற்படவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்பட்டால் ஆச்சரியப்படாதீர்கள். ஆச்சரியப்படுவது என்பது அவிசுவாசத்தைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் அதிலும் அற்புதம் நடக்கும் என்று உறுதியாய் நில்லுங்கள். எலியா அவ்வாறு தான் செயல்பட்டான் விதவையின் மகன் உயிரோடு எழுப்பப்பட்டான். அது வரைக்கும் வேதத்தில் யாருமே உயிரோடு எழுபப்பட்டது இல்லை. எலியா இப்படிப்பட்ட அற்புதம் இதுவரை நிகழாததினால் அது நடக்காது என்று நினைக்கவும் இல்லை. நீங்களும் விசுவாசியுங்கள். அற்புதம் பெறுங்கள்.
அறிக்கை:
என் சூழ்நிலைகளைப் பார்த்து நான் கலங்கப்போவதில்லை. என் கன்மலையாகிய கர்த்தரை நான் நோக்கியிருக்கிறேன். அவரே என் வாழ்க்கையில் அற்புதங்களை செய்வார். ஆமென்.
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு.
Cell:9994209793
Email:aronrhema@gmail.com