அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை: 1 இராஜாக்கள் 18:21.
எலியா அக்கினியை இறக்கத்தக்கதான ஒரு பெரிய அற்புதத்தை செய்தான். இந்த அற்புதத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதாய் ஜனங்களை எல்லாம் கூடி வரச்சொல்லி ஆகாபுக்கு சொல்கிறான். ஜனங்களுக்கெல்லாம் செய்தி அனுப்பி அவர்கள் கூடிவர ஒரு சில நாட்களாகிய இருக்கலாம். ஜனங்கள் எல்லோரும் கர்மேல் பர்வதத்தின் மேல் வர எலியா அவர்களிடத்தில் வந்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது மக்களெல்லாம் ஒரு திசையிலிருந்து வர வேறு ஒரு பக்கத்திலிருந்து எலியா வந்திருக்கிறான். இந்த இடைப்பட்ட நாட்களில் எலியா என்ன செய்திருப்பான். இந்த அற்புதத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதாக கர்த்தருடைய சமூகத்தில் கர்மேல் மலையின் மேல் தனிமையில் காத்திருந்து விட்டு அவன் வந்திருக்க வேண்டும். எந்த பிரச்சினையானாலும், தேவையானாலும் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய சாதனையானாலும் கர்த்தருடைய சமூகத்தில் முதலில் அமைதியாய் காத்திருங்கள். சங் 46:10 “ நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள். ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்” என்ற கூறுகிறது. கழுகு எல்லா பறவைகளைக் காட்டிலும் மேலே பறப்பது. அதுபோல கர்த்தருடைய சமூகத்தில் உயர்ந்த நிலைமையில் சஞ்சரிக்கிறவர்கள் கழுகுகளைப் போல எழும்புவார்கள். இளைப்படையார்கள், சோர்வடையார்கள்.
அறிக்கை:
கர்த்தருக்கு காத்திருக்கும் நான் கழுகுகளைப் போல எழும்புவேன். இளைப்படையேன், சோர்வடையேன், புது பெலன் அடைவேன். ஆமென்.
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு.
Cell:9994209793 # Email:aronrhema@gmail.com