இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிரபல பாடசாலையான சாய்ந்தமருது அல் – ஹிலால் பாடசாலையில் 43 மாணவர்கள் புலமைப் பரிசில் பெறுவதற்குத் தகுதி.
இலங்கையில் இம்முறை (2019) நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை வலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது கோட்டத்திலுள்ள பிரபலமான பாடசாலையான சாய்ந்தமருது அல் -ஹிலால் பாடசாலையில் வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப்பெற்று 43 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக அதிபர் எம்.எஸ்.எம்.பைஸல் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப்பிரிவு புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி 153 ஆகும். இதேநேரம் இப்பாடசாலையில் 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று 223 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.ஸாகிர்.