உத்திரமேரூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் உயர்நிலை நீர்தேக்க தொட்டி: அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
உத்திரமேரூர், டிசம்பர். 1 – காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே குடிநீர் உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி ஓன்று ஆபத்தான நிலையில் உள்ளது, அதனை இடித்து அப்புறப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ளதது ஒழையூர் கிராமம், இங்குள்ள காலனி பகுதியில் துலுக்கானத்தம்மன் கோவில் அருகே கடந்த 25 -ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி ஓன்று கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படாதநிலையில் தற்சமயம் அந்த குடிநீர் உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியானது முற்றிலும் சேதமடைந்து, அதன் நான்கு தூண்களும் உடைந்து எப்போது விழலாம் என்று தள்ளாடி வருகிறது.
அந்த உயர்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் அங்கன்வாடி மையாம் ஓன்று செயல்பட்டு வருகிறது, அதில் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் இந்த பகுதியில்தான் விளையாடிவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் இந்தவளியாகத்தான் செல்லவேண்டி இருப்பதாலும் அச்சத்தோடு இந்த இடத்தை கடந்துசெல்கின்றனர்.
தற்சமயம் பெய்துவரும் கனமழையால் அந்த நீர்த்தேக்க தொட்டி முழுவதும் ஊறி அதிலிருந்து சிமெண்ட் கலவைகள் பெயர்ந்து விழுவதாகவும், அந்த நீர்த்தேக்க தொட்டியை சுற்றி மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிப்பதாகவும், எப்போது யார் தலையில் விழுமோ என்ற அச்சத்தோடு இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அந்த கிராமத்தின் பொதுமக்கள், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுகொடுத்தும் இதுவரை வந்து பார்க்கவில்லையென்றும், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளிடம் புகார் மனுகொடுத்தும், நேரில் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்று அந்த கிராமத்து பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே எதாவது ஒரு விபத்து நடந்தபின்பு அதுசம்மந்தப்பட்ட அனைத்தயும் ஆய்வுசெய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் அரசாங்கமும், அதிகாரிகளும் இதுபோன்று மக்கள் குறிப்பிடும் நேரத்தில் அதனை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தால் விபத்தினை தவிர்க்கலாம். அதற்க்கு பெயர்தான் வருமுன் காப்பது.
இந்த உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியினை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது அந்தப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
செய்தி: நாஞ்சி பாலகுமாரன்.