Social Sharing
ஏழை இசுலாமிய குடும்பங்களுக்கு அரிசி,மளிகை தொகுப்புகள்- எம்.எல்.ஏ தூசி மோகன் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், ரமலான் பெருநாளை யொட்டி 300 ஏழை இசுலாமிய குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் அரிசி உள்ளிட்ட பொருட்களை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் வழங்கினார்.
வந்தவாசி நூர் மசூதி அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்த 300 குடும்பத்தினருக்கு ரூபாய் 500 மதிப்பிலான அரிசி,மளிகை,காய்கறி தொகுப்புகள்ழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி, எம்ஜிஆர் மன்ற பாலு முதலியார், ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.ஏ லோகேஸ்வரன், பச்சையப்பன், நகர செயலாளர் ஹோட்டல் பாஷா இளவழகன், சையத் அப்துல் கரீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.