Social Sharing
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கிளைச் செயலாளர் தேவா தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் சின்னசாமி, ஆதிகபிலன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சேகர் கலந்து கொண்டார்.
வதிட்டப்புறம் மயானத்திற்கு செல்லும் வழியை சீரமைத்து சவ ஊர்வலம் வண்டி நிற்பதற்கு நிழல் குடை அமைத்தல் கரும காரியம் செய்வதற்கு கட்டிடம் கட்டித் தருதல் தெருக்களில் தேங்கிநிற்கும் கழிவுநீர் வெளியே செல்வதற்கு வாய்க்கால் கட்டித் தருதல் அங்கன்வாடி மையக் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
மகளிர் சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதி செய்து தரவேண்டும் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகையன், மங்களூர் ஒன்றிய செயலாளர் நிதி உலகநாதன், நல்லூர் ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, ஒன்றிய துணை செயலாளர் குமார், பொருளாளர் காசிநாதன், செயலாளர் செல்வராசு, கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செல்வேந்திரன்.