Social Sharing
சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் நிகர்நிலை பல்கலைக்கழக சட்டக்கல்லூரி டீன் முனைவர் வழக்கறிஞர் கே. நிலாமுதீன் காலமானார். பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் இரங்கல்.
சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் நிகர்நிலை பல்கலைக்கழக சட்டக்கல்லூரி டீன் முனைவர் வழக்கறிஞர் கே. நிலாமுதீன் இன்று காலை சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த மறைவு செய்தி கேட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், ஒய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர்கள் இரங்கல் தெரிவித்தார்.
நாகர்கோவில் அடுத்த திருவிதாங்கோடு, இஸ்லாமிய மாதிரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் , துணை நிறுவனரும் , யூ.டி.எப். டிரஸ்ட்டி, முனைவர் வழக்கறிஞர் ஹாஜி. டாக்டர். கே. நிலாமுதீன் இதற்கு முன்பு திருச்சி சட்டக்கல்லூரியில் 19 ஆண்டுகளாக பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற பின் தஞ்சாவூர் சாஸ்தா நிகர்நிலை பல்கலைக்கழக சட்டக்கல்லூரி டீனாக 9 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.தற்போதைய சென்னை. கிரஸண்ட் சட்டக்கல்லூரி டீனாக பணிபுரிந்து வருகிறார்.
சென்னையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனைவர் வழக்கறிஞர் கே. நிலாமுதீன் (வயது 70) ஞாயிற்றுக்கிழமை காலை காலமனார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், ஐக்கிய முன்னேற்றப் பேரவை. இணை அமைப்பாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட இஸ்லாமிய இளைஞர் பேரவையின். இணை ஆலோசகர், பல்கலைகழகத்தின், செனட் மற்றும் சிண்டி கேட் உறுப்பினராக பதவிகள் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியதாவது :சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் நிகர்நிலை பல்கலைக்கழக சட்டக்கல்லூரி டீன் முனைவர் வழக்கறிஞர் கே. நிலாமுதீன் இன்று காலை சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை மரணமுற்ற செய்தி மிகவும் வேதனையை தந்தது.
சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் நிகர்நிலை பல்கலைக்கழக சட்டக்கல்லூரி டீன் முனைவர் வழக்கறிஞர் கே. நிலாமுதீன் எனக்கு நீண்ட நாள் நண்பர் இவர் திருச்சியில் சட்டக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த போது பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார். இவர் பல்வேறு சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு நற்பணிகளை செய்து வந்ததை யாரலும் மறக்க முடியாது. இவருடைய பேச்சு மற்றும் சட்ட சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக நல்ல கருத்துக்களை சமுதாய மக் களுக்கு எடுத்து கூறி வந்தவர். முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்களை உருவாக்கிய பெருமை இவரே சாரும். மார்க்க பணிகளிலும், சமூக கல்வி சேவையிலும் மிகுந்த முன்மதிரியாக திகழ்ந்தவர்.
வழக்கறிஞர்கள் மத்தியில் அசைக்க முடியாத தூணாக இருந்து வழக்கறிஞர் பணி பேராசிரியர் பணியை ஆற்றி வந்தார். முஸ்லிம் லீக் தலைவர்கள் இடத்திலும் மிகுந்த அன்பை மதிப்பையும் வைத்து இருந்தார். பாராட்டையும் பெற்று வந்தார். முனைவர் வழக்கறிஞர் கே. நிலாமுதீன் ஹாஜியாரின் மறைவால் இந்த சமுதாயத்திற்கும் மற்றும் வழக்கறிகளுக்கும் ஏற்பட்டு இருக்கின்ற பேரிழப்பு இருந்து அல்லாவுடைய பெரும் கருணையால் மீள் வளத்துக்கும் அல்லாவிடம் பிராத்திப்போம்.
ஹாஜியாரின் பிளைகளை பொறுத்தி கொண்டு ஜன்னத்தூல் பிர்ஃதௌஸ் என்னும் பேராணந்த பெரும் வீட்டை இறைவன் அவருக்கு வழங்குவனாக அவரின் மறைவால் வாடும் அவரது மனைவி மக்கள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் ஜம்ரன் ஜமீலன் என்னும் அழகிய பொறுமையை வழங்குவதற்கு இறைஞ்சிவோம் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹாஜி ஜி.எம். அக்பர் அலி விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியதாவது : மூத்த வழக்கறிஞர் மற்றும் பேராசிரியர் கே. நிலாமுதீன் மறைவு செய்தி கேள்விப்பட்டதும் எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. சட்டப் படிப்பை முடித்துவிட்டு நீதிமன்றமறங்களில் சில காலம் பணிபுரிந்து பின்னர் அரசு சட்டக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து பல்வேறு வழக்கறிஞர்களை உருவாக்கிய பெருமை இவரே சாரும். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தில் பல்வேறு வழக்கறிஞர்களை உருவாக்கிய பெருமை இவரே சாரும். சிறந்த சட்ட வல்லுநர்களை உருவாக்கும் முயற்சியில் இவருடைய பங்கு அதிக அளவில் இருந்து உருவாக்கினார்.
சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரி உருவாக்க இவருடைய பங்கு அதிகமாக இருந்து அங்கே சட்டக்கல்லூரி டீனாக பணிபுரிந்து வந்தார். எனக்கும் நிலாமுதீன் நட்பு நீண்ட காலமாக இருந்து வந்தது. அவருடைய சட்ட ரீதியான பிரச்சினை குறித்து பல தடவை நாங்கள் பேசும்போது முஸ்லிம் சமுதாயத்திற்கு பல்வேறு நற்பணிகளை செய்ய வேண்டும். இன்னும் அதிக அளவில் இளம் வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும் சொல்லி கொண்டே இருப்பார். எப்போதும் சமுதியத்திற்கு எதாவது சமூக மணிகளை செய்து வேண்டும் என்ற சிந்தனைகளையோடு செயல்படுவார்.
முனைவர் வழக்கறிஞர் கே. நிலாமுதீன் ஹாஜியாரின் பிளைகளை பொறுத்தி கொண்டு ஜன்னத்தூல் பிர்ஃதௌஸ் என்னும் பேராணந்த பெரும் வீட்டை இறைவன் அவருக்கு வழங்குவனாக அவரின் மறைவால் வாடும் அவரது மனைவி மக்கள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் ஜம்ரன் ஜமீலன் என்னும் அழகிய பொறுமையை வழங்குவதற்கு இறைஞ்சிவோம் இவ்வாறு இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவிற்கு மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் சேமுமு முஹம்மது அலி மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.இவருடைய ஜானஸா இவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே தேங்காப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ஷாஹுல் ஹமீது.