சேலம் மாவட்டத்தில் ரூபாய்.1020 கோடி மதிப்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வி.கூட்ரோடு பகுதியில் சுமார் 1100 ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிலையம் கால்நடை பல்கலைக்கழகம் ஆகிய ஒன்று சேர்ந்த பல்நோக்கு கால்நடை ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
அதன் கட்டுமானப் பணிகள் ரூபாய்.1020 கோடி மதிப்பிலான புதிய கட்டிட பணிகள் ஒரு ஆண்டுக்குள் நிறைவுபெற்று மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று உறுதியளித்தார் அதேபோல் பணிகள் விரைவாக நடைபெற்று வந்த கடந்த ஆண்டு ஊரடங்கு மற்றும் நோய்த் தொற்று காரணமாக பணிகள் சற்று காலதாமதம் ஆகியது இருப்பினும் பெரும்பாலான கட்டிடங்கள் முழுமை பெற்ற நிலையில் இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை தனது பொற்கரங்களால் தொடங்கிவைத்தார்.
இன்று முதல் கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் எனவும் கூறினார் இந்த விழா குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் ஆய்வு மேற்கொண்டு சில ஏற்பாடுகளை கண்காணித்து வந்த நிலையில் இன்று சிறப்பாக திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் தமிழக முதல்வர் மற்றும் அதிமுக முக்கிய கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதல்வரிடம் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர் மேலும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அடிக்கல் நாட்டியும் அரசு கட்டிடத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தினார் தலை வாசலை மையமாக வைத்து தலைவாசல் பகுதியை புதிய வட்டமாக இன்று தமிழக முதல்வர் செயல்பட அனுமதி அளித்துள்ளார் அதற்கான புதிதாக கட்டப்பட்ட தலைவாசல் வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தும் உரை நிகழ்த்தினார்.
M. வெற்றிச்செல்வன்.