சேலம் மாவட்டம் வட சென்னிமலை முருகன் கோவிலில் இன்று சத்தாபரணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது பழம் பெருமை வாய்ந்த வடசென்னிமலை முருகன் ஆலயம் இந்த ஆலயம் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பெருமை வாய்ந்த முருகன் கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை இருவருடன் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் இந்த கோவில் சிறிய மலையின் மீது அமைந்துள்ளது தற்பொழுது பங்குனி மாதம் என்பதால் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் நேற்று முன்தினம் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதன் மூன்றாம் நாளான இன்று முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் பகுதியில் சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப அலங்காரத்துடன் ஊர்வலம் வருகிறார் இதனை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர் இதனையொட்டி வட சென்னிமலை முருகன் கோவில் பகுதியில் ஏராளமான கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் திருவிழா நடைபெறுவதற்காக 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் முருகப் பெருமான் திருவீதி உலா நடைபெற்று முடிந்த உடன் கோவில் நிர்வாகம் சார்பாக பாரம்பரியமிக்க பிரமாண்டமான வானவேடிக்கை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.