Social Sharing
ஜமால் முகமது கல்லூரி உமறுப்புலவர் தமிழ்ப்பேரவையும் உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கமும் இணைந்து நடத்திய பாரதி உலா நிகழ்ச்சி.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி உமறுப்புலவர் தமிழ்ப்பேரவையும் உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கமும் இணைந்து நடத்திய பாரதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் இஸ்மாயில் முகைதீன் தலைமையுரையாற்றினார். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அ.சையத் ஜாகீர் ஹஸன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்குக் கல்லூரி ஆட்சிமன்றக் குழு செயலர் மற்றும் தாளாளர் முனைவர் ஏ.கே. காஜா நஜுமுதீன், உதவிச் செயலர் முனைவர் அப்துஸ் சமது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குநர் நடிகர் விசு கலந்துகொண்டு மாணவர்களைப் பாராட்டிப் பேசியதோடு, பரிசுகளை வழங்கினார். மகாகவி பாரதியாரின் சிந்தனைகளைச் செயலாக்குவோம் என்றார். பாரதியின் சிந்தனைகளைப் பேச்சரங்கமாகவும் பாட்டரங்கமாகவும் மாணவர்கள் நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் இயக்குநர் ராசி அழகப்பன், உரத்த சிந்தனை உதயம் ராம், தமிழாவுத்துறை பேராசிரியர்கள் பேராசிரியர் முஹம்மது இஸ்மாயில், முனைவர் முஹம்மது யூனுஸ், முனைவர் செல்வராசு, முனைவர் தௌபீக் ரமீஸ், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பெருந்திரளாக மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உமறுப்புலவர் தமிழ்ப்பேரவைத் துணைத்தலைவர் முனைவர் எஸ்.நாகூர் கனி நன்றி கூறினார்.
அதேபோல் ஜமால்முகமது கல்லூரி தமிழாய்வுத் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் முனைவர் எஸ்.இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தாா். கல்லூரி தலைவா் எம்.ஜே.ஜமால் முகம்மது பிலால், செயலா் மற்றும் தாளாளர் . ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளா் ஹாஜி ஜமால் முகமது, உதவி செயலாளர் முனைவர் அப்துல் சமது, கல்லூரி நிதியாளர் முனைவர் அப்துல் காதர் நிகால், விடுதி இயக்குநர் முஹம்மது பாசில் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் ஜாகீர் ஹசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமாா் கலந்து கொண்டு அவா் மேலும் பேசியது:தமிழகத்தில் தமிழ் வளா்ச்சி என்பது பெரும்பாலும் அறிக்கைகள் அளவில் மட்டுமே இருக்கிறது. உள்ளாட்சி போன்ற முக்கியத்துறைகளில் தமிழ் எழுத படிக்க கூட தெரியாதவா்கள் இருக்கின்றனா். ஆனால், தமிழக அரசு தமிழ் மொழி வழியாக ஆவணங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என ஆங்கிலத்தில் சுற்றறிக்கை அனுப்புகிறது. பல்துறைகளிலும் தமிழ் மொழியை கொண்டு செல்வதற்கான முயற்சிகளை ஆராய்ச்சி மாணவா்கள் கொண்டு செல்ல வேண்டும். பிற துறைகளில் தமிழ் மொழியை புகுத்துவதற்கான தடைகளை பலா் ஏற்படுத்துவதால், பிற மொழி மக்களிடம் தமிழின் பெருமையை கொண்டு செல்ல முடியவில்லை.எனவே அனைத்து கலை, பண்பாடு, கலாசாரம் சாா்ந்த அனைத்து துறைகளிலும் தமிழ் மொழிக்கான பெருமையை உயா்த்த வேண்டும்.
புதிய பொருள்களுக்கு புதிய சொற்களை கண்டறிந்து அவற்றை அறியாத மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பல்துறை கருத்துகளை தமிழில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். நவீன இலக்கியங்களை கற்பதன் முலம் தமிழின் சொல்வளத்திற்கு வலிமையான ஈடுபாட்டை உருவாக்கும் இவ்வாறு அவர் பேசினார்.
தொடா்ந்து பிற்பகல் நடைபெற்ற கருத்தரங்க அமா்வில் எழுத்தாளா் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன், தூயவளனாா் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவா் பி.செல்வக்குமாரன் ஆகியோா் நிறைவு விழாப் பேரூரை நிகழ்த்தினா். முன்னதாக, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம் துணைவேந்தா் கோ.பாலகிருஷ்ணன், கல்லூரி அயல்நாட்டு தமிழ்க் கல்வித்துறை துறைத்தலைவா் ரா.குறிஞ்சிவேந்தன் ஆகியோா் கருத்துரை வழங்கினா். தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியா் க.இம்தாதுல்லாஹ், முனைவர் இக்பால், முனைவர் சிராஜ்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஷாஹுல் ஹமீது, தலைமை செய்தியாளர்.