Social Sharing
டிசம்பர் 12 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா வருகிற டிசம்பர் 12 நாடெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மாநகர, ஒன்றிய, அனைத்து சார்பு அணிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ரவி மினி ஹாலில் மாவட்ட செயலாளர் எம் கலீல் தலைமையில் மாநகர செயலாளர் எஸ் வி ஆர் ரவிசங்கர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் எஸ். சுதர்சன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் அனைத்து ஒன்றிய செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் இணைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் கர்ணன், ராஜ்பாலன் ராயல் ராஜ், நாசர்,மன்னன் இளங்கோ, சந்திரசேகர்,சக்திவேல், முத்து, விமல்ஜித், தமீம், வேலுமணி,சுஜாபாய், பழனி, சுரேஷ், தென்னூர் ரோடு, ரஜினி குணா, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ராஜகுமாரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி ஆனந்தன்.