Social Sharing
தமிழ் பேசும் நல்லுலகில் இலங்கை இந்திய இணைப்புப் பாலமாக இருந்த சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் இழப்பு ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது . ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்
தமிழ் பேசும் நல்லுலகில் இலங்கை – இந்திய இணைப்புப் பாலமாக இருந்த சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் இழப்பு ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அனுதாபச் செய்தியில் கூறியதாாவது : இலங்கையிலும், இந்தியாவில் தமிழகத்திலும் வாழ்ந்தும,; வளர்ந்தும் பன்னூலாசிரியராகவும், எழுத்தாளராகவும், வானொலிக் கலைஞராகவும், கிரிக்கெட் விளையாட்டு வர்ணனையாளராகவும் பரிணமித்து தடம் பதித்த பெருந்தகை அப்துல் ஜப்பாரின் மறைவு அங்கும், இங்கும் அநேகரை கவலையில் ஆழ்;த்தியிருக்கின்றது.
இலங்கையிலும், இந்தியாவிலும் அவருக்கென தனியான வாசகர் மற்றும் நேயர் வட்டமொன்று இருந்தது. அவ்வாறே இவ் இரு நாடுகளிலும் மட்டுமல்லாமல், மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அவருக்கு பரந்துபட்ட நண்பர் குழாமொன்றும் இருந்தது. சமயப் பற்றும், இலக்கிய ஆர்வமும், விளையாட்டு ஈடுபாடும் அவருக்கு ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்தது. அப்துல் ஜப்பாரின் குடும்பத்தினரோடு அனுதாபத்தை பகிர்ந்து கொள்வதோடு, அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு அவரது அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாஹுல் ஹமீது