திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு தடுப்பு பணிகள்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடலூர் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் கீதா அவர்களின் அறிவுறுத்தலின்படி டெங்கு ஒழிப்பு தடுப்பு பணிகள் நடைபெற்றது.
மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். ஆவட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிந்தனைச் செல்வி முன்னிலையில் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெற்றது.
இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராஜசேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம் ,சுகாதார ஆய்வாளர்கள் ராஜகுமாரி, பாஸ்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல்கள் கண்டறியும் பணி கொசுப்புழு ஒழிப்பு குளோரினேசன் ஆய்வு புகை மருந்து அடிக்கும் பணி ஆகியவை மேற்கொண்டனர்.
மேலும் நீரினால் பரவும் நோய்கள் குறித்தும் கொசுவினால் பரவும் நோய்கள் குறித்தும் நலக் கல்வி வழங்கி டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தினர். பின்னர் பப்பாளி இலைச்சாறு நிலவேம்பு மலைவேம்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் முறை அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் முதிர் கொசுக்களை அழிக்கும் விதமாக அப்பகுதியில் புதிய மருந்து அடிக்கப்பட்டது. முடிவில் பேரூராட்சி ஊழியர் ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செல்வேந்திரன்.