ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியை மிக நன்றாக உள்ளது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மிகப்பெரிய தலைவர்கள் இல்லாத ஒரு தேர்தலை சந்தித்தா4 லும் அ.தி.மு.க.வுக்கு சாதகமான அம்சங்கள் அதிகமாக இருக்கிறது திருச்சியில் பாஜக செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டி.
திருச்சி, 4 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியை பார்க்கும்போது மிக நன்றாக உள்ளது. குறை சொல்லும் அளவுக்கு இல்லை பழனிசாமி ஆட்சி. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மிகப்பெரிய தலைவர்கள் இல்லாத ஒரு தேர்தலை சந்தித்தாலும் அ.தி.மு.க.வுக்கு சாதகமான அம்சங்கள் அதிகமாக உள்ளது என்று திருச்சியில் பாஜக செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்தார்.
தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி அருகே உள்ள கோப்பு கிராமத்தில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கலந்துகொண்டு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஏராளமான பெண்கள் அடுப்பில் பொங்கல் வைத்து தயார் நிலையில் இருந்தனர். சிலம்பாட்டம், கரகாட்டம் உள்பட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குஷ்பு மாலை 5 மணி அளவில் வந்தார்.
அப்போது அவரை வரவேற்க வந்தவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி (வயது 60) என்ற மூதாட்டி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
கோப்பு மைதானத்தில் பாஜக மகளிரணி சாா்பில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். மாநில செயலா் பாா்வதி நடராஜன், பாஜக மாநகர மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா், மண்டலத் தலைவா் சேது அரவிந்த் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் குஷ்பு பேசினார்.
பின்னர் நடிகை குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க. வெற்றிபெறும் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், அது நடக்கவில்லை. இப்போது கருணாநிதி இல்லாத ஒரு தேர்தலை தி.மு.க. சந்திப்பது மிகப்பெரிய சவால். கருணாநிதியோடு, ஸ்டாலினை ஒப்பிடவே முடியாது. கருணாநிதி விட்டு சென்ற இடத்தை ஸ்டாலின் மட்டுமல்ல எவராலும் நிரப்ப முடியாது.
4 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியை பார்க்கும்போது மிக நன்றாக உள்ளது. குறை சொல்லும் அளவுக்கு இல்லை பழனிசாமி ஆட்சி. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மிகப்பெரிய தலைவர்கள் இல்லாத ஒரு தேர்தலை சந்தித்தாலும் அ.தி.மு.க.வுக்கு சாதகமான அம்சங்கள் அதிகமாக உள்ளன.முதன்முறையாக ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தோ்தலை அக்கட்சியினா் சந்திக்கின்றனா். இவற்றில் அதிமுகவுக்கு எதிராகப் பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அதிமுக ஆட்சி நன்றாக இருக்கிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேனா எனத் தெரியாது; மாநிலத் தலைவரின் முடிவைப் பொறுத்து அது அமையும்.
சுதந்திரமாக கருத்துக் கூறக்கூடிய தளமாக சமூக வலைதளம் உள்ளது. தவிர பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட பெரும் கட்சிகள் சமூக வலைதளங்களில் இல்லை. சமூக வலைதள பிரசாரங்களால் எந்த மாற்றமும் நிகழாது. போட்டியிடும் வேட்பாளா், கட்சியைப் பாா்த்துதான் மக்கள் வாக்களிப்பா்; அதைப் பொறுத்தே ஆட்சி மாற்றமும் நிகழும். நாட்டிலுள்ள 70 சத விவசாயிகளில் 10 சதம் பேரே வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடுகின்றனா். அவா்களிடம் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, வேளாண் சட்டங்களில் மாற்றம் கொண்டு வருகிறது. விவசாய அமைப்புகளிடம் ஆலோசித்த பிறகே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது அவற்றைக் குறைகூறுவது ஏற்புடையதுதல்ல.
கூட்டணி முடிவுக்குப் பிறகு முதல்வா் வேட்பாளா் குறித்து முடிவெடுப்போம். பெண்களை இழிவாகப் பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்காதது மனவேதனை அளிக்கிறது. இதன் மூலம், திமுகவிலிருந்து நான் வெளியேறியதற்கான காரணங்களை மக்கள் தெரிந்து கொள்கின்றனா்
2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்த திட்டங்கள் தான் புதிய வேளாண் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தவறான தகவல்களை பரப்பி விவசாயிகளை குழப்பக் கூடாது.
தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக, திருப்தியாக உள்ளனர். மழை, வெள்ளம் காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். கூட்டணி அமைப்பது, முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது எல்லாவற்றையும் கட்சி தலைமை தான் அறிவிக்கும். ரஜினியிடம் தோழியாக, சக நடிகையாக பேசியிருக்கிறேன். அரசியல் பேசியதில்லை.
பெண்களை இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உதயநிதி கூறியிருக்கிறார். தி.மு.க.வில் இருந்து நான் ஏன் வெளியே வந்தேன் என்பது மக்களுக்கு இப்போது புரிய தொடங்கியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த விழாவில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர். ராமசுப்பு, மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.