Social Sharing
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.71.42 லட்சம்.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ.71.42 லட்சம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கோயில்களில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படும். இந்நிலையில் நேற்று கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் 21 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டன. இந்த பணியில் கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
உதவி ஆணையா்கள் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் நந்தகுமாா், திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் டி.விஜயராணி, சமயபுரம் கோயில் மேலாளா் ம.லட்சுமணன் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்னும் பணி கோயில் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். இதில் ரூ.71,42,913 ரொக்கம், 779 கிராம் தங்கம், 2 கிலோ,818 கிராம் வெள்ளி, 21 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்ததாக கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
ஷாஹுல் ஹமீது.