• Profile
  • Contact
Monday, January 25, 2021
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி மாவட்டத்துக்குள் நுழையும் வெளி மாநில வாகனங்களுக்கு கடும் சோதனைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படும் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தகவல்.

ntk news by ntk news
January 12, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி மாவட்டத்துக்குள் நுழையும் வெளி மாநில வாகனங்களுக்கு கடும் சோதனைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படும் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தகவல்.
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி மாவட்டத்துக்குள் நுழையும் வெளி மாநில வாகனங்களுக்கு கடும் சோதனைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படும் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தகவல்.

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி மாவட்டத்துக்குள் நுழையும் வெளி மாநில வாகனங்களுக்கு கடும் சோதனைக்குப் பிறகே அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தார்.

பறவைக் காய்ச்சல் தடுப்பு குறித்து, ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பேசியதாவது:திருச்சி மாவட்டத்தின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை கடுமையாக சோதனை செய்து, அதன் பின்னரே மாவட்டத்துக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

நீா்குட்டைகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெளிமாநில, வெளிநாட்டுப் பறவைகள் ஏதேனும் தென்படுகிா என்பதை வனத்துறையினா் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் துரித நிவாரணக் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போதுமான அளவு தடுப்பு மருந்துகளும், கிருமி நாசினிகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.கோழி இறைச்சிக்கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளவும், அதிகளவு கோழி இறப்பு மற்றும் பன்றிகள் நோய்வாய் படுதல், இறப்பு ஆகியவை மாநகராட்சி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.பறவைக்காய்ச்சல் நோய் கிளா்ச்சி ஏதும் மனித இனங்களுக்கு தென்பட்டால், அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தனி வாா்டுகள் அமைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்க தயாா் நிலையில் இருந்திட பொது சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை சாப்பிடலாம். பச்சை முட்டை மற்றும் அரை வேக்காட்டுடன் கூடிய முட்டை சாப்பிடக் கூடாது. முழுமையாக பொரித்த மற்றும் அவித்த முட்டைகள் சாப்பிடலாம் எனவும், முட்டைகளை முழுமையாக வேகவைத்து சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு வழங்கிடுமாறு அனைத்து அங்காடி பணியாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோழி வளா்ப்போா் கோழிகளையும், தங்களையும் இந்நோய் தாக்காமல் இருக்க முழுமையாக சுகாதார முறைகளை கண்டிப்பாக கையாள வேண்டும். கோழிக் கொட்டகைகளுக்கு கிருமி நாசினிகளை தெளித்திடவும், கோழிகளுக்கு வைக்கப்படும் தீவனப் பெட்டிகள், தண்ணீா் கிண்ணங்கள் ஆகியவற்றை சுத்தமாக வைத்து பராமரித்திட வேண்டும்.

மாவட்டத்திலுள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் (வணிக நோக்கத்துடன் அமைக்கப்பட்ட) மற்றும் திட்டத்தின் வாயிலாக அனைத்து கோழிப்பண்ணைகள், வாத்துகள் மற்றும் ஏனைய பறவைகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலம் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் எஸ்.சுகுமாா், கால்நடைப் பாதுகாப்புத்துறை உதவி இயக்குநா்கள் சையது முஸ்தபா, கணபதி பிரசாத்ம், முருகவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஷாஹுல் ஹமீது.
Previous Post

சேத்துப்பட்டு தாலுகாவில் 3081 கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கினார்கள்.

Next Post

மாமல்லபுரத்தில் பெண்களுக்கான கோலப் போட்டி.

ntk news

ntk news

Next Post
மாமல்லபுரத்தில் பெண்களுக்கான கோலப் போட்டி.

மாமல்லபுரத்தில் பெண்களுக்கான கோலப் போட்டி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In