Social Sharing
பிரான்சு நாட்டின் நம்பர்-1 பால் பிராண்டு லாக்டேல். இப்போது இந்தியாவில் விற்பனைக்கு.
பிரான்சு நாட்டின் நம்பர்-1 பால் பிராண்டான லாக்டேல், இப்போது UHT வகை 1 லிட்டர் பால், 70 ரூபாய்க்கு விற்பனையை தொடங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கும் இந்த பால் வகை உலக பிரபலம் வாய்ந்தது. 1967-ம் ஆண்டு அறிமுகமான இந்த லாக்டேல் பால் பிராண்டு இப்போது இந்தியாவில் அறிமுகாகியுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட விற்பனை அனுபவத்தையும், 50க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை மேற்கொண்டு வருகிறது.
திருமலா, அனிக், பிரபாத் போன்ற பால் பிராண்டுகளோடு ஏற்கனவே லாக்டாலிஸ் குழுமம் ஈடுபட்டு வருகிறது. லாக்டேல் UHT வகை பால், வைட்டமின் ஏ மற்றும் டி சத்தி நிறைந்தது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி, வலுவான எலும்புகள், தசைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது.
இந்திய சந்தையில் இப்போது தடம் பதித்திருக்கும் இந்த பிராண்டு, சர்வதேச அளவிலான தரமான ஊட்டச்சத்து நிறைந்த பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
லாக்டேலிஸ் குழுமம் மற்றும் லாக்டேல் பற்றி: 1933ம் ஆண்டு தொடங்கப்பட்ட லாக்டேலிஸ் குழுமம், இப்போது உலகின் மிகப் பெரிய பால் நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. 2014-ம் ஆண்டு திருமாலா பிராண்டை வாங்கியதை தொடர்ந்து, 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளின் அனிக் மற்றும் பிரபாத் பிராண்டுகளை வாங்கியது.
அதனை தொடர்ந்து உலகின் பல்வேறு இடங்களிலும் இந்த பிராண்டு விரிவடைந்தது. இந்திய சந்தை மட்டுமின்றி, சர்வதேச சந்தையிலும் தனக்கான தனி இடத்தை இந்த பிராண்டு பிடித்துள்ளது. மேலும், பிரான்சு நாட்டின் நம்பர்-1 பால் பிராண்டான லாக்டேல், 1967-ம் ஆண்டுதொடங்கப்பட்டு இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 50ஆண்டுகளுக்கும் மேற்பட்ட விற்பனை அனுபவத்தையும், 50க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை மேற்கொண்டு வருகிறது.
ஷாஹுல் ஹமீது.