Social Sharing
புதிய வாக்காளர் சேர்க்கையில் தமிழகத்தில் கரூர் மாவட்டம் முதலிடம் – வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் மலர்விழி பேட்டி.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் வருகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன் இன்று வெளியிட்டார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,01,902 பேரும், பெண் வாக்காளர்கள் 1,11,201 பேரும், இதர வாக்காளர்கள் 7- பேர் என மொத்தம் 2,13,110- வாக்காளர்கள், இடம்பெறுகின்றனர்.
இதேபோல்,கரூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,15,834 பேரும், பெண் வாக்காளர்கள் 1,28,321 பேரும், இதர வாக்காளர்கள் 19-பேர் என மொத்தம் 2,44,174- வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,03,736 பேரும், பெண் வாக்காளர்கள் 1,08,865 பேரும், இதர வாக்காளர்கள் 43-பேர் என மொத்தம் 2,12,644- வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர்.
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,10,462 பேரும், பெண் வாக்காளர்கள் 1,16,312 பேரும், இதர வாக்காளர்கள் 11 மொத்தம் 2,26,785 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர்.
ஆகமொத்தம் கரூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4,31,934, பெண் வாக்காளர்கள் 4,64,699, இதர வாக்காளர்கள் 80 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவிக்கையில்,
கரூர் மாவட்டத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 8 லட்சத்து 96 ஆயிரத்து 713 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இதில் புதியதாக 17 ஆயிரத்து 631 நபர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் 16,637 நபர்கள் இடம்பெறுகின்றனர். இதன் மூலம் மாநில அளவில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் கரூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என தெரிவித்தார்.
சம்பத்குமார்.