Social Sharing
மாமல்லபுரத்தில் பெண்களுக்கான கோலப் போட்டி.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும கலங்கரை விளக்கம் மக்கள் நல சேவை மையம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் கோலப்போட்டி நடந்தது.
இந்நிகழ்ச்;சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணி செயலாளரும், கலங்கரை விளக்கம் மக்கள் நல சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார்.
இரண்டு பிரிவுகளாக நடந்த கோலப் போட்டியில் மாமல்லபுரம் 15 வார்டு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு வண்ண, வண்ண பொடிகள் தூவி, பூக்கள், தானியங்கள் கொண்டு புள்ளி கோலம், மாவு கோலம், பொங்கல் கோலம், உழவர் திருநாள் கோலம், கொரோனா விழிப்புணர்வு கோலம் என 1 மணி நேரத்தில் விதவிதமான கோலங்கள் வரைந்து அசத்தினர்.
இக்கோலப்போட்டியில் குடும்ப தலைவிகள், கல்லூரி, பள்ளி மாணவிகள, மகளீர் குழுவினர்; பலர் கலந்து கொண்டனர். இந்த கோலப்போட்டியில் பங்கேற்று போட்டி தேர்வு குழுவினர் மூலம் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெண்களுக்கு பொங்கல் தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பாலாஜி