Social Sharing
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த என்ஜினீயா் உள்பட 3 பேருக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மகளிர் நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு.
திருச்சி: முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த என்ஜினீயா் உள்பட 3 பேருக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் தீபா (வயது 32). தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார் (38). இவர்கள் திருச்சியில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தபோது காதலித்தனர். கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி இருவரும் திருச்சி சமயபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கணேஷ்குமாருக்கு 2011-ல் சிவரத்தினபாலா என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடந்தது தீபாவுக்கு தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் தீபா கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி கணேஷ்குமார், தீபாவுக்கு தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் கணேஷ்குமார், அவரது தாய் மாரியம்மாள், தம்பி பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையொட்டி நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கணேஷ்குமார், அவருடைய தாயார், தம்பி ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி மணிவாசகம் தீர்ப்பளித்தார்.
ஷாஹுல் ஹமீது.