ஆற்றின் கரையோரத்தில் உள்ள ரோடு தடுப்புகள் சேதம். 12 கிமீ., துாரம் சுற்றி பயணிக்கும் அவலம்.
முதுகுளத்தூர், நவ. 30 – இராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே ஆற்றின் கரையோரத்தில் உள்ள ரோட்டின் தடுப்பு கற்கள் சேதமடைந்துள்ளதால், மழை காலங்களில் பயணிக்க முடியாமல், 12 கிமீ., துாரம் சுற்றி பயணிக்கும் அவலம் உள்ளது.
கமுதி பேரையூர் அருகே கொல்லங்குளம், புல்வாய்க்குளம் பகுதியில் உள்ள குண்டாற்றின் கரையோரங்களில் ரோடு வசதி உள்ளது. இந்த ரோடு வழியாக சிறுமணியேந்தல், மாங்குடி, ஆத்திகுளம், புல்வாய்க்குளத்திற்கு குறைந்த துாரத்தில், போக்குவரத்து வசதியில்லாததால், பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.
ஆனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ரோட்டின் பக்கவாட்டில் அமைக்கபட்ட தடுப்பு கற்கள் சேதமடைந்து, சிதறி கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் கிராவல் ரோட்டில் மண் அரிப்பு ஏற்பட்டு, போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் , கரையோர ரோடு உருக்குலைந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் முதுகுளத்துார், அபிராமம் வழியாக 12 கிமீ., துாரம் தங்களது ஊர்களுக்கு செல்ல சுற்றி பயணிக்கும் அவலம் உள்ளது.
ஆகவே குண்டாற்றின் கரையோரங்களில் சேதமடைந்த ரோட்டினையும், தடுப்பு சுவர்களையும் சீரமைத்து, தார் ரோடு அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முதுகுளத்தூர் வேல்முருகன்.