Social Sharing
வந்தவாசியில் தமுமுக சார்பில் 600 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி,மளிகை தொகுப்புகள்- மாவட்ட செயலாளர் நசீர் அகமது வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், ரமலான் பெருநாளை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் 100 க்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் மக்கா மசூதி அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்த 600 குடும்பத்தினருக்கு ரூபாய் 500 மதிப்பிலான அரிசி,மளிகை,காய்கறிகள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர் அஷ்ரப்,நகரதலைவர் அன்வர்சதாத், ஒன்றிய தலைவர் அமானுல்லா, யாத்கர் ரஃபி, ஊடகபிரிவு பஷீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.