விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாடு திடலில் 100 அடி உயர தி.மு.க.கொடியேற்றி வைத்து, பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருச்சி: விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக முழுவதும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இறுதியில் 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பேசுகிறார்.
திமுகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்க 300க்கும் மேற்பட்ட திமுகவினர் திருச்சி விமான நிலையத்தில் குவித்துள்ளனர். செண்டை மேளம் முழங்க வரவேற்புக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன், உதயநிதி ஸ்டாலின், கேஎன்.நேரு, திருச்சி சிவா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கனிமொழி, துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பிரச்சார வேனில் பொதுக்கூட்டத்திற்கு மைதானத்திற்கு வந்தார்கள்.
இன்று மாலை 4 மணிக்கு தமிழ் பண்பாடு மற்றும் பெருமையை பறைசாற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 4.15 மணிக்கு சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி ஆகிய துறைகளின் தற்போதைய நிலையை தி.மு.க. முன்னணியினர் மற்றும் வல்லுநர்கள் பேசுகிறார்கள். 5.15 மணிக்கு தமிழ்ப்பண்பாடு மற்றும் பெருமையை பறை சாற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்ட அரங்கிற்கு வந்து மக்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
மாலை 6 மணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகிறார். அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பேசுகிறார்கள். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சியில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்ட நுழைவு வாயில் அருகே ஏராளமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டது..