Social Sharing
வெள்ளிக்கிழமை – 26/03/2021
இந்த நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். மத்தேயு 25:24- 28
ஒரு தாலந்தை வாங்கினவன்தான் அதை பயன்படுத்தாமல் புதைத்து வைத்தான். அதேபோல வாழ்க்கையில் குறைவான தாலந்துகளை பெற்றவர்கள் மற்றவர்களைப்போல தங்களுக்கு தாலந்துகள் இல்லை என்று தவறாக எண்ணிக்கொண்டு தங்களிடம் இருக்கும் தாலந்தை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். தாலந்துகள் அவர்களுடைய திறமைக்கு ஏற்பவே கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு குறைவான தாலந்துகள் கொடுக்கப்படிருந்தாலும் சோர்ந்துபோகாமல் அதை பயன்படுத்துங்கள்.
அறிக்கை:-
ஆண்டவர் என்னுடைய திறமைக்குக்கேற்ப எனக்கு கொடுத்திருக்கிற தாலந்துகளை முழு அளவிற்கு நான் பயன்படுத்துவேன். அதனால் எனது திறமையை இரண்டுமடங்காக ஆக்கிக்கொள்வேன். ஆமென்
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு.
Cell:9994209793 # Email:aronrhema@gmail.com