குணசாலியான ஸ்திரியைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. நீதிமொழிகள் 31:10
ஞானத்தைக் குறித்து கூறுகிற புத்தகத்தின் இறுதியில் குணசாலியான ஸ்திரியைக்குறித்து ஞானி கூறுவதன் இரகசியம் என்ன? ஞானத்தினால் நிறைந்திருத்தல் என்பது வேத வசனத்தினால் நிறைந்திருந்து அதை செயல்படுத்துகிறவர்களாய் இருத்தல். கர்த்தருடைய வார்த்தையை செயல்படுத்துகிறவர்களாய் இருந்தால் அதாவது ஞானமுள்ளவர்களாய் நடந்துகொண்டால் குணசாலியாகவும் இருப்போம். ஆகையால் குணசாலியான ஸ்திரிக்கு சொல்லப்பட்டிருக்கிற குணாதிசயங்கள் ஒரு மனைவிக்கு இருக்க வேண்டிய தகுதிகளைக் கூறுவது மட்டுமல்லாமல்; அதாவது குணசாலியான மனைவியினால் உண்டாகிற நண்மைகளை மாத்திரம் கூறாமல் ஞானத்தினால் நமக்கு உண்டாகிற நன்மைகளையும் கூட குறிக்கிறதாய் இருக்கிறது.
அறிக்கை: நான் ஞானத்தை நேசிப்பேன். ஞானத்தை கனப்படுத்துவேன். ஞானத்திலே பிரியமாயிருப்பேன். ஆமென்.
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு. Cell:9994209793
Email: aronrhema@gmail.com