மத்தேயு 6:33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
உங்களுக்கு தவறான நோக்கம் இருக்கும் என்றால் உங்கள் மனது இன்னும் புதிதாக்கப்படவில்லை என்றாகிறது. உலக வாழ்க்கைக்கு தேவையான உணவு உடை பணம் இவற்றை மாத்திரம் தேடுவிர்கள் என்றால் உங்கள் மனது பதிதாகவில்லை. முதலாவது தேவனுடைய இராட்சியத்தையும் அவருடைய நீதியையும் தேடுவீர்கள் என்றால் இவைகள் எல்லாம் கொடுக்கப்படும் என்று இயேசு கூறுகிறார். எனவே முதலாவது நீங்கள் தேடவேண்டியது ஆண்டவரையே. இதிலும் இன்னும் ஒன்றை கவனிக்கவேண்டும். ஆணடவரைத்தேடினால் உணவும் உடையும் கிடைக்கும் என்பதற்காக மட்டும் அவரைத் தேடாதீர்கள். ஆண்டவர்தான் உங்களை உண்டாக்கியவர். அவர்தான் உங்கள் தகப்பன். அவர் உங்களை நேசிக்கிறார். உங்களது அன்பை அவர் விரும்புகிறார். உணவு உடை கிடைக்கும் என்பதினால் ஆண்டவரைத் தேடாமல் அவரில் அன்பு கூறுவதால் அவரைத் தேடவேண்டும். அப்பொழுது மற்றவைகளும் கூடக் கொடுக்கப்படும். இப்படி உங்கள் எண்ணம் இருக்கும் என்றால் உங்கள் மனது புதிதாக்கப்பட்டுள்ளது.
அறிக்கை:
நான் கர்த்தரிடத்தில் அன்பு கூறுவதால் அவருடைய இராட்சியத்தையும் அவருடைய நீதியையும் தேடுவேன். அதனால் எல்லாம் எனக்கு கூட கொடுக்கப்படும். ஆமென்.
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு. Cell:9994209793
Email: aronrhema@gmail.com