சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. நீதிமொழிகள் 12:27.
சோம்பேறி அவன் கைகளில் இருப்பதை அவன் மதிப்பதே இல்லை. ஒன்று அதை அவன் இழந்துபோவான். அல்லது அழித்துவிடுவான். இல்லையென்றால் கவனக்குறைவாக அதை நாசமாக்கிவிடுவான். தன்னிடத்தில் இருக்கும் கொஞ்சத்தை அவனால் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் அவனிடத்தில் எதுவும் இருப்பதில்லை. ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஒருவன் உழைத்து சிரமப்பட்டு இருப்பான் என்றால் அதை அவன் மதிப்பான். ஆனால் சோம்பேறி எப்பொழுதும் இலவசமாக ஏதாவது கிடைக்குமா? என்று எதிர்ப்பார்த்து இருப்பான். அப்படி கிடைத்தாலும் அவன் அதை மதிக்காததால் அவன் அதை இழந்துபோவான்.
அறிக்கை:நான் இன்று செய்ய வேண்டிய காரியங்களை இன்றே செய்து முடிப்பேன்.என்னுடைய திட்டங்களையும் பணிகறையும் உடனே செய்து முடிப்பேன். நான் எதையும் ஆரம்பித்து அதை முடிப்பதற்கான பெலனை என் தேவன் எனக்குத்தருவார் . ஆமென்
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு. Cell:9994209793
Email: aronrhema@gmail.com