Social Sharing
5.5 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு 5 மணி நேரம் காலதாமதமாக வந்த அதிமுக அமைச்சர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம், இலத்தூர், சித்தாமூர், ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்கள் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் நேற்று வந்தனர்.
அப்போது அதிமுக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம், இலவச வீட்டு மனை பட்டா, மானிய விலையில் இருசக்கர வாகனம், ஆகிய சுமார் ₹5.5 கோடி மதிப்பில் வழங்கினர்.
செங்கை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காலை 11 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி காலை 8 மணிக்கே பொது மக்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதில் பல பெண்கள் குழந்தைகளுடன் வந்து காத்திருந்தனர். ஆனால் மதியம் ஒரு மணிக்கு அமைச்சர் வந்தார் அதன் பிறகு விழா தொடங்கியது.
இதனால் நீண்ட நேரம் குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர். பலர் சோர்வடைந்து விழா நடந்த வளாகத்திலேயே படுத்து விட்டனர். மேலும் பொதுமக்கள் கூறுகையில் இதுபோன்று அரசு விழா நிகழ்ச்சியை முன்கூட்டியே சரியான நேரம் தேர்ந்தெடுத்து குறிப்பிட்டால் இதுபோன்று பெரும் சிரமம் ஏற்படாது என தெரிவித்தனர்.
ராஜசேகர் மதுராந்தகம்.